அவரை முட்டை பொரியல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பட்டை அவரை - 1/4 கிலோ

முட்டை - 1

கறிவேப்பில்லை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

வெங்காயம் - வெட்டியது கொஞ்சம்

கடுகு - தேவைக்கு

காய்ந்தமிளகாய் - 2

செய்முறை:

அவரைக்காயை பொடியாக நறுக்கிகொள்ளவும்...கொஞ்சம் உப்பு சேர்த்து 3 நிமிடம் வேக வைக்கவும்..

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி மிளாகையை ரெண்டாக உடைத்து போடவும். பின் கடுகு கறிவேப்பில்லை வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வேகவைத்த அவரைக்காயை சேர்க்கவும் அவரையில் உள்ள தண்ணீர் வற்றியதும், முட்டையை அப்படியே உடைத்து ஊற்றவும்.

கிளறிவிட்டு முட்டை சுருண்டு அவரையுடன் சேரும் பதம் வந்ததும் அடுப்பை அணைத்து பரிமாறவும்.

குறிப்புகள்: