அம்ரிஸ்டரி ஃபிஷ் ஃப்ரை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஃபிஷ் ஃபில்லெட் - 500 கிராம்

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

இஞ்சி விழுது - 2 மேசைக்கரண்டி

பூண்டு விழுது - 2 மேசைக்கரண்டி

கடலை மாவு - 1 கப்

எலுமிச்சை சாறு - 1 மேசைக்கரண்டி

முட்டை - 1 (விரும்பினால் சேர்க்கலாம்)

சாட் மசாலா - 1 தேக்கரண்டி (விரும்பினால்)

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மீன் சுத்தம் செய்து சின்ன துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

முட்டை உடைத்து ஊற்றி கலந்து மற்ற பொருட்களும் சேர்த்து கலந்து வைக்கவும்.

இதில் மீன் தூண்டுகள் சேர்த்து பிரட்டி, 20 நிமிடம் ஊர வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மீன் போட்டு வறுத்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: