ஹைதராபாத் கோழிக்கறி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிறிய துண்டுகளாக நறுக்கப்பட்ட கோழி - 1 கிலோ

மிகவும் பொடியாக நறுக்கப்பட்ட தக்காளி - 2 கப்

பட்டை - 1 பெரிய துண்டு

கறிவேப்பிலை - 1 கைப்பிடி

மிளகாய் வற்றல் - 10

கசகசா - 1 ஸ்பூன்

சோம்பு - 1 மேசைக்கரண்டி

ஏலம் - 2

தேங்காய் துருவல் - 1 கப்

வெங்காயம் - 2

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

நெய் - 2 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

நெய்யில் பட்டை, கசகசா, சோம்பு, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல், ஏலம், தேங்காய் முதலியவற்றை வதக்கிக் கொள்ளவும்.

வெங்காயங்களை தீயில் தோலுடன் சுட்டு, ஆறியதும் தோலை நீக்கவும்.

அனைத்தும் ஒன்றாக மையாக அரைத்துக்கொள்ளவும்.

கோழியை மஞ்சள் தூள், தக்காளியுடன் வேகவைக்கவும்.

முக்கால்வாசி வெந்ததும் அரைத்த மசாலா சேர்த்து கொதிக்க விடம்.

கோழி நன்கு வெந்து குழம்பு சிறிது கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: