ஸ்பைசி சிக்கன் கிரேவி
தேவையான பொருட்கள்:
சிக்கன் (லெக் பீஸ்) - 5
இஞ்சி விழுது - 1 1/2 தேக்கரண்டி
பூண்டு விழுது - 1 1/2 தேக்கரண்டி
ஏலம் - 2
கிராம்பு - 4
கருவா - ஒரு துண்டு
மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
சோம்பு தூள் - 1 தேக்கரண்டி
சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 2 தேக்கரண்டி
வத்தல் தூள் - 2 தேக்கரண்டி
மசாலா தூள் - 2 1/2 தேக்கரண்டி
தனியாதூள் - 2 தேக்கரண்டி
வெங்காயம் (பெரியது) - பாதி
தக்காளி - 5 மேசைக்கரண்டி
தேங்காய்பால் - 5 மேசைக்கரண்டி
எண்ணெய் - தாளிக்க
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
அடுப்பில் சட்டியைவைத்து எண்ணெய் ஊற்றி கருவா,ஏலம்,கிராம்பு போட்டு தாளிக்கவும்.
பின் இஞ்சி,பூண்டு போட்டு வதக்கவும்.
பின் வெங்காயம் போட்டு வதக்கவும் பச்சை வாசனை போகும்வரை நன்கு வதக்கவும்.
பின் தக்காளி போட்டு வதக்கி,பின் எல்லாதூளையும் போட்டு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் கறியை போட்டு கிளறி,தேங்காய் பால் ஊற்றி நன்கு கிளறவும்.சிறிது தண்ணீர் ஊற்றி குறைந்த தீயில் வைத்து வேகவிடவும்.
கறி வெந்ததும் கிரேவி போல் ஆனதும் இறக்கி பரிமாறவும்.