வறுத்து அரைத்த மீன் கறி (1)
தேவையான பொருட்கள்:
மீன் - 1/2 கிலோ
தேங்காய் - 1 கப்
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - ஒரு முழு பூண்டு
சுக்கு - ஒரு அங்குல துண்டு
ஓமம் - 2 தேக்கரண்டி
மிளகு - 2 தேக்கரண்டி
பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 6
தனியா (முழு) - 3 தேக்கரண்டி
புளி - ஒரு எலுமிச்சை அளவு
கறிவேப்பிலை - 5 கொத்து
நல்லெண்ணெய் - 3 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மீனை சுத்தமாக்கி துண்டுகளாக்கவும். வெங்காயம், பூண்டை தோலுரித்து வைக்கவும். புளியை ஊற வைத்து கரைக்கவும்.
வாணலியில் நல்லெண்ணெய் சூடாக்கி மிளகை போட்டு வெடிக்க விடவும்.
மிளகாய் வற்றல், தனியா சேர்த்து 2 நிமிடம் வறுக்கவும்.
பின்னர் வெங்காயம், 10 பல் பூண்டு, கறிவேப்பிலை போட்டு 3 நிமிடம் வதக்கி தேங்காய் துருவல் சேர்க்கவும்.
அடுப்பை சிம்மில் வைத்து வறுத்து தேங்காய் பொன்னிறமானதும் பொடித்த சுக்கு, ஓமம், பெருங்காயம் சேர்க்கவும்.
தேங்காய் வறுபட்டு டார்க் ப்ரவுன் நிறமாகும் வரை சிம்மில் வைத்து வறுக்கவும். (ஓரளவு கருப்பு நிறமாகும்).
சூடு ஆறியதும் மிக்ஸியில் மையாக அரைத்து கொள்ளவும். அரைத்த கலவையுடன் புளிக்கரைசல், உப்பு சேர்த்து உப்பு காரம், புளி சரியாக இருக்கிறதா என சரி பார்த்து கொள்ளவும்.
இதனுடன் மீன் துண்டுகளையும் மீதமுள்ள பூண்டுகளையும் சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு கொதித்து மணம் வந்த பிறகு இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
சூடான சாதத்துடன் சுவையாக இருக்கும்.