முருங்கை கறிக் குழம்பு
தேவையான பொருட்கள்:
மட்டன் - 1/4 கிலோ
முருங்கை - 1
தக்காளி - 2
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மல்லித்தூள் - 4 தேக்கரண்டி
புதினா இலை - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - 3 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
அன்னாசிப்பூ - 1
பிரிஞ்சி இலை - 1
கிராம்பு - 1
வெங்காயம்(பெரியது) - 1
அரைக்க:
இஞ்சி - கொஞ்சம்
பூண்டு - 5 பல்
சோம்பு - 1/2 தேக்கரண்டி
கசகசா - 1 தேக்கரண்டி
மிளகு - 10
பட்டை - 1
கிராம்பு - 1
தனியாக அரைக்க:
தேங்காய் - 2 சில்
செய்முறை:
குக்கரில் கறியைப் போட்டு அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து சேர்த்து சிறிது மஞ்சள்தூள், சிறிது எண்ணெய் சேர்த்து குக்கரில் 3 விசில் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
வேக வைத்துள்ள கறியுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.
நறுக்கி வைத்துள்ள முருங்கைக்காய், தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் முதலியவற்றை போடவும்.
அதில் மஞ்சள்தூள், மிளகாய்துள், மல்லித்தூள், உப்பு ஆகியவற்றை சேர்க்கவும்.
நன்கு கொதிக்க வைக்கவும்.
ஒரு வாணலியில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளிக்கவும்.
பிறகு தனியாக அரைத்து வைத்துள்ள தேங்காயை அதனுடன் சேர்த்து தாளித்து கொதிக்கும் குழம்பில் ஊற்றவும். சுவையான முருங்கை கறிக்குழம்பு தயார்.