முட்டை சால்னா
தேவையான பொருட்கள்:
முட்டை - 4
பழுத்த தக்காளி - 2
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
தேங்காய்ப்பால் - 1 கப்
தேங்காய் விழுது - 1/2 கப்
மல்லிக்கீரை - பாதி கட்டு
மசாலாத்தூள் - 1 தேக்கரண்டி
மல்லித்தூள் - 3 தேக்கரண்டி
மிளகாய்தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பச்சை மிளகாய், பாதி வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு எண்ணெயில் போட்டு தாளிக்கவும்.
பிறகு முறுக ஆரம்பிக்கும் போது மிளகாய்தூள் போட்டு, அதனுடன் மீதமுள்ள வெங்காயம், தக்காளியை நைசாக நறுக்கி போட்டு வதக்க வேண்டும்.
ஓரளவு கூழ் போன்று வதங்கியவுடன் தேங்காய்ப்பால் ஊற்றி, தேங்காய் விழுது, மசாலாத்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், உப்பு போட்டு கொதிக்கவிட வேண்டும்.
கொதிக்க ஆரம்பிக்கும் போது முட்டையை உடைத்து கலங்காமல் அதில் ஊற்றி, மல்லிக்கீரையை நைசாக நறுக்கிப்போட்டு 3 அல்லது 4 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
இடியாப்பம், பராசப்பம் போன்றவற்றுக்கு ஒரு நல்ல, ஈஸியான சைட் டிஷ்.