முட்டை குழம்பு (8)
தேவையான பொருட்கள்:
முட்டை - 6
தக்காளி - 1
சின்ன வெங்காயம் - 15
பெரிய வெங்காயம் - 1
பூண்டு - 4 பல்
காய்ந்த மிளகாய் - 5
தேங்காய் துருவல் - 1 மூடி
சோம்பு - 1 தேக்கரண்டி
கசகசா - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
தனியா தூள் - 1 மேசைக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
சிறிய வெங்காயம், மிளகாய், தேங்காய் துருவல் எல்லாவற்றையும் சிறிது எண்ணெய் விட்டு வதக்கவும்.
வதக்கியவற்றோடு சோம்பு, கசகசா, சீரகம், தனியா தூள் சேர்த்து நைசாக அரைத்து வைக்கவும்.
பெரிய வெங்காயம், பூண்டு, தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
நறுக்கிய வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கிய பின், அரைத்ததை ஊற்றி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.
குழம்பு கொதித்ததும், முட்டையை உடைத்து ஒவ்வொன்றாக பக்கம், பக்கமாக ஊற்றவும். முட்டை வெந்து மேலே மிதக்கும் போது இறக்கி பரிமாறவும்.