முட்டை குழம்பு (12)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முட்டை - 2

பெரிய வெங்காயம் - 2

தக்காளி - 2

சோம்பு - தாளிக்க

மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - சிறிது

எண்ணெய் - ஒரு குழி கரண்டி

உப்பு - தேவையான அளவு

அரைக்க:

சோம்பு - 1 தேக்கரண்டி

தேங்காய் - அரை மூடி

செய்முறை:

வெங்காயம் ,தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.முட்டையை தோசைக்கல்லில் அடை போல நான்கு அடையாக ஊற்றி வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சோம்பு ,கருவேப்பில்லை தாளித்து வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.பின் தக்காளியை கொஞ்சம் உப்பு சேர்த்து வதக்கவும்.

மஞ்சள் தூள் , மிளகாய் தூள் சேர்த்து நான்கு டம்ளர் தண்ணீர்,சேர்க்கவும் மிளகாய் வாசம் போகும் வரை கொதித்தவுடன் அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும். (தேங்காய் பாலாகவும் சேர்க்கலாம்.)

ஐந்து நிமிடம் கழித்து முட்டையை சேர்க்கவும்.சிம்மில் இரண்டு நிமிடம் வைத்து மூடி வைக்கவும். பிறகு அடுப்பை நிறுத்தவும்.

குறிப்புகள்:

சூடான சாதத்திற்கு எற்றது