முட்டை குழம்பு (11)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முட்டை - 4

சின்ன வெங்காயம் - 10

தக்காளி - 2

அரைக்க:

காய்ந்த மிளகாய் - 6

இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

பட்டை - ஒரு துண்டு

லவங்கம் - 1

தேங்காய் - 2 மேசைக்கரண்டி

சோம்பு - 1/2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முட்டையை உடைத்து ஊற்றி சிறிது உப்பு சேர்த்து நன்றாக அடித்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஆவியில் வேகவைத்து சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளியை வதக்கி அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்.

நன்றாக வதக்கி அரைகப் தண்ணீர் சேர்த்து குழப்பு திக்கானதும் முட்டையை போட்டு ஒரு கொதி விட்டு இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

மசாலா கெட்டியாக வைத்து முட்டையை பிரட்டி விட்டால் இன்னும் நன்றாக இருக்கும்.

சாதத்திற்கு எற்றது