முட்டை குழம்பு (10)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வேகவைத்த முட்டை - 4

தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி

மல்லித்தூள் - 2 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

மட்டன் மசாலா தூள் - 2 தேக்கரண்டி

வெங்காயம் - 2

தக்காளி - 1

எண்ணை - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கவும்

தேங்காய், மல்லி தூள், மிளகாய் தூள், கறி மசாலா இவற்றை அரைத்து கொள்ளவும். ஓரளவு திக்காக இருக்க வேண்டும்.

சிறிது எண்ணெயில் வெங்காயம் தக்காளியை வதக்கி அரைத்தவற்றை உப்புடன் சேர்க்கவும்.

பச்சை வாடை போகும் வரை நன்கு கொதிக்க வேண்டும்.

குழம்பு கெட்டியாக இருந்தால் 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.

குழம்பு அதிக தண்ணியாக இல்லாமலும் கெட்டியாக இல்லாமலும் நடுத்தரமாக இருக்கும் போது குழம்பில் முட்டையை கீறி போடவும்.

அடுப்பை சிம்மில் வைத்து கொதித்தவுடன் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

சப்பாத்தி, சாதம் இவற்றுடன் சாப்பிட உகந்தது