முட்டை கடலை குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வேக வைத்த முட்டை - 4

வேக வைத்த கொண்டைக்கடலை - 100 கிராம்

வெங்காயம் - 1

தக்காளி - 1

மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

இஞ்சி பூண்டு கலவை - 1 தேக்கரண்டி

புளிக்கரைசல் - 1 கப்

கடுகு, சோம்பு - தாளிக்க

எண்ணெய் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.

அகன்ற பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, சோம்பு தாளிக்கவும். பிறகு அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி, உப்பு போட்டு நன்றாக வதக்கவும்.

பின்பு வதங்கிய கலவையில் மிளகாய் தூள், தண்ணீர் மற்றும் புளிக்கரைசலை ஊற்றி உடனே வெந்த கொண்டைக்கடலை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

வெந்த முட்டையில் கத்தியால் நன்றாக கீறி விடவும். பிறகு அந்த முட்டைகளை கொதிக்கும் புளிக்கரைசலில் போடவும்.

முட்டை குழம்புடன் நன்றாக கொதித்து வரும். பிறகு குழம்பு பதத்திற்கு வந்த உடன் இறக்கி சூடாக பரிமாறவும்.

குறிப்புகள்:

சப்பாத்தி மற்றும் சாதத்துடன் பரிமாற ஏற்ற ஒரு குழம்பு.