முட்டைக் குழம்பு
தேவையான பொருட்கள்:
முட்டையில் கலப்பதற்கு:
முட்டை - 3
பொடியாக நறுக்கிய வெங்காயம் - பாதி
பச்சை மிளகாய் - 1
உப்பு - தேவையான அளவு
பட்டை - 1 துண்டு
ஏலம் - 1
நீளமாக நறுக்கிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 4
இஞ்சி + பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி
தக்காளி - 1
கொத்தமல்லித் தழை - 1/4 கப்
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மல்லித்தூள் - 1/2 தேக்கரண்டி
தேங்காய் பால் - 3/4 கப்
எண்ணெய் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லித் தழை ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பச்சைமிளகாயை கீறி வைத்துக் கொள்ளவும். தேங்காயை துருவி பால் எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், உப்பு சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும்.
குழிப்பணியாரச் சட்டியில் சிறிது எண்ணெய் விட்டு செய்து வைத்திருக்கும் முட்டை கலவையை குழியில் ஊற்றி வேக விடவும்.
இருபுறமும் வெந்ததும் எடுத்து ஒரு தட்டில் இந்த பணியாரத்தை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பட்டை, ஏலக்காய் போட்டு தாளிக்கவும். அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கிய பிறகு அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி, கொத்தமல்லித் தழை சேர்த்து வதக்கவும்.
அதில் மல்லித் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு அந்த மசாலா கலவையில் தேங்காய் பால், உப்பு சேர்த்து கிளறி விடவும்.
தீயை குறைத்து வைத்து 8 நிமிடம் வரை வைத்திருந்து குழம்பை கொதிக்க விடவும்.
கொதிக்கும் குழம்பில் செய்து வைத்திருக்கும் முட்டைகளை சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி பரிமாறவும்.