முட்டைக்குழம்பு (1)
தேவையான பொருட்கள்:
முட்டை - 5
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 10 பல்
தக்காளி - 4
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மல்லித்தூள் - 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
தேங்காய் - 2 சில்
சோம்பு, சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி
செய்முறை:
3 முட்டையை வேகவைத்து உரித்துக் கொள்ளவேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் தாளிக்கவும்.
அதனுடன் நறுக்கிய வெங்காயம், 6 பல் பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கி, மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், சோம்பு, சீரகத்தூள், உப்புச்சேர்த்து கிளறி 4 கிளாஸ் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.
தேங்காயையும், மீதி 2 பல் பூண்டையும் அரைத்து ஊற்றி கொதிக்கவிட்டு, மீதியுள்ள 2 முட்டையை உடைத்து ஊற்றி வெந்தவுடன் வெந்த முட்டையையும் போட்டு இறக்க பரிமாறவும்.