முட்டைக்குழம்பு
தேவையான பொருட்கள்:
முட்டையில் கலக்க:
முட்டை - 3
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1/2 பாகம்
பச்சை மிளகாய் - 1
குழம்புக்கு:
பட்டை - ஒரு துண்டு
ஏலம் - 1
நீளமாக நறுக்கிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 4
இஞ்சி, பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி
தக்காளி - 1
மல்லி இலை - 1/4 கப்
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மல்லித்தூள் - 1/2 தேக்கரண்டி
தேங்காய்ப் பால் - 3/4 கப்
எண்ணெய் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் எண்ணெயை காயவைத்து அதில் பட்டை, ஏலம் போட்டு பொரிந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கி பொன்னிறமானதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அதனுடன் தக்காளி, மல்லி இலை மற்ற பொடிகளை சேர்த்து நன்கு வதக்கி தக்காளி மசிந்து மையாகும் வரை வதக்கவும்.
பின் தேங்காய்ப்பால் சேர்த்து உப்பு சேர்த்து இளம் தீயில் கொதிக்க விடவும். அதே சமயம் கலக்கக் கொடுத்துள்ள முட்டை, பச்சை மிளகாய், வெங்காயம், சிறிது உப்பு சேர்த்து அடித்து பணியாரம் சுடும் சிறிய குழிசட்டியில் சிறிது எண்ணெய் விட்டு கலக்கிய முட்டைகளை குழியில் ஊற்றி இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.
பிறகு முட்டைகளை கொதிக்கும் குழம்பில் சேர்த்து மேலும் 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி பரிமாறவும்.