மீன் முளகிட்டது (1)
தேவையான பொருட்கள்:
மீன் (அயிலை, மத்தி) - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 15
பூண்டு - 3 பல்
பச்சை மிளகாய் - 3
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
பச்சை மாங்காய் - 1 அல்லது ஒரு எலுமிச்சை அளவு உருண்டை புளி
தக்காளி - 1
கறிவேப்பிலை - 2 கொத்து
தேங்காய் எண்ணெய் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் தேங்காய் எண்ணெயை காயவைத்து அதில் வெந்தயம் போட்டு பொரிந்ததும் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், நறுக்கிய பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
நன்கு பொன்னிறமானதும் பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து மேலும் வதக்கவும்.
பிறகு தக்காளி சேர்த்து நன்கு மை போல் ஆகும் வரை வதக்கவும். அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள்களை சேர்த்து உப்பு சேர்த்து புளியை 3/4 கப் தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
அதில் புளிக்கரைசலை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். புளிக் கரைசல் கொதித்ததும் மீன் துண்டுகளை சேர்த்து மேலும் 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி பரிமாறவும்.