மீன் மாங்காய் குழம்பு

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

மீன் - 1 கிலோ

மாங்காய் - 1

வெங்காயம் - 100 கிராம்

பூண்டு - 4 பல்

தக்காளி - 2

பச்சைமிளகாய் - 4

கறிவேப்பிலை - ஒரு கொத்து

புளி - ஒரு எலுமிச்சை அளவு

சோம்பு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

வெந்தயம் - 1 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

சாம்பார் பொடி - 6 தேக்கரண்டி

கடுகு, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

எண்ணெய் - 4 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஒரு கடாயில் சோம்பு, சீரகம், வெந்தயம் ஆகியவற்றை எண்ணெய் இல்லாமல் வறுத்து பூண்டு, பாதி சின்ன வெங்காயம் சேர்த்து அரைக்கவும்.

மீதி வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கவும். பச்சைமிளகாயை கீறிக்கொள்ளவும். மாங்காயை பெரிய கீற்றாக நறுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, பாதி வெந்தயம் போட்டு தாளித்து, வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும். வதங்கியதும் மாங்காயை போட்டு கிளறவும்.

ஒரு பாத்திரத்தில் மீனை போட்டு மஞ்சள் தூள், சாம்பார் பொடி அரைத்த மசாலா ஆகியவற்றை போட்டு பிசறி புளியை கரைத்து ஊற்றி கிளறி, மாங்காய் வதங்கியதும் கிளறியதை ஊற்றவும். உப்பு போட்டு கொதித்தவுடன் எண்ணெய் மிதந்து வரும்போது இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: