மீன் குழம்பு (9)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மீன் - 1/2 கிலோ

சின்ன வெங்காயம் - 1 கப்

தக்காளி - 1

மிளகு - 1 1/2 தேக்கரண்டி

மிளகாய் வற்றல் - 6 அல்லது காரத்துக்கு ஏற்ப

தனியா - 2 மேசைக்கரண்டி

மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி

புளி - 1 எலுமிச்சை அளவு

கறிவேப்பிலை - 3 கொத்து

நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மீனை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு மிளகு சேர்த்து வெடிக்க விடவும்.

மிளகாய் வற்றல், தனியா சேர்த்து குறைந்த தீயில் 5 நிமிடம் வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.

அதே வாணலியில் சின்ன வெங்காயம் 1 கொத்து கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

வெங்காயம் பாதி வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் எடுத்து சூடு ஆறியதும் ஏற்கெனவே வறுத்த பொருட்களோடு சேர்த்து மையாக அரைக்கவும்.

புளியை கரைத்து மஞ்சள்தூள், உப்பு சேர்க்கவும். இதனுடன் அரைத்த மசாலா சேர்த்து கலக்கி உப்பு, புளி, காரம் சரிபார்க்கவும்.

மீன் துண்டுகளை சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.

இடையிடையே சட்டியை சுழற்றி விடவும்.

கொதிவந்ததும் கறிவேப்பிலை சேர்த்து மேலும் 5 நிமிடம் கொதிக்க விடவும்.

பச்சை வாசனை போனதும் தீயை குறைத்து மூடி போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும்.

மேலே எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

சூடான சாதத்தோடு பரிமாறவும்.