மீன் குழம்பு (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மீன் - 1/2 கிலோ

புளி - பெரிய நெல்லிக்காய் அளவு

தக்காளி - 3

வெங்காயம் - 2

பச்சைமிளகாய் - 4

கத்தரிக்காய் - 4

வெண்டைக்காய் - 4

கறிவேப்பிலை - ஒரு கொத்து

மீன் குழம்பு தூள் - 5 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி (குழம்பு பொடியில் மிளகாய் சேர்க்கவில்லை என்றால் 2 ஸ்பூன் போட்டுக் கொள்ளலாம்)

எண்ணெய் - 2 குழிக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மீனை நறுக்கி சுத்தம் செய்துக் கொள்ளவும்.

புளியை ஊற வைத்து கரைத்து வைக்கவும். அதில் மீன் குழம்பு தூள் சேர்த்து கரைக்கவும். பின் தக்காளி, பச்சைமிளகாய், கத்தரிக்காய் (இரண்டாக வெட்டி நடுவில் இரு கீறல் விடவும்), வெண்டைக்காய் சேர்க்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை தாளிக்கவும். பின்னர் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

பின்னர் மிளகாய் தூள் சேர்த்து நெடி போக வதக்கவும்.

அதன் பிறகு புளிக்கரைசலை சேர்த்து கொதிக்க விடவும்.

நன்கு கொதித்து மசாலா வாசனை அடங்கியதும் மீன் துண்டுகளை வெவ்வேறு இடங்களில் போடவும். அத்துடன் தேவைக்கு ஏற்ப உப்பையும் சேர்க்கவும். மீன் வெந்ததும் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: