மீன் குழம்பு (11)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மீன் - 1/2 கிலோ

புளி - ஒரு எழுமிச்சை அளவு

சின்ன வெங்காயம் - 30

வத்தல் - 8

சீரகம் - 5 மேசைக்கரண்டி

மஞ்சள்தூள் - சிறிது

கொத்தமல்லி இலை - சிறிது

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு -தேவையான அளவு

செய்முறை:

முதலில் மீனை சுத்தம் செய்துக்கொள்ளவும்.

புளியை கரைத்து தனியாக வைக்கவும்.

வத்தல், சீரகத்தை மைபோல் அரைக்கவும்.

வெங்காயத்தை மட்டும் தனியாக கரகரப்பாக அரைக்கவும்.

கரைத்து வைத்த புளிகரைசலில் மசாலாவை போட்டு,அரைத்த வெங்காயம்,மஞ்சள்தூள், உப்பு போட்டு கலந்துவைக்கவும்.

அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் புளிகரைசலை ஊற்றி கொதித்ததும் மீன் துண்டுகளைப்போட்டு மிதமான தீயில் வேகவைக்கவும்.குழம்பில் எண்ணெய் மிதந்து மீன் வெந்ததும் .மேலே கொத்தமல்லி இலை தூவி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: