மீன் குழம்பு (1)
தேவையான பொருட்கள்:
சதை பற்றான மீன் - 6 அல்லது 8 துண்டுகள்
வெங்காயம் - 1
பூண்டு - 7 பல்
தக்காளி - 1
மாங்காய் - 5 துண்டுகள்
மிளகு தூள் (காரத்திற்கு ஏற்ப கூட்டலாம்) - 1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் (காரத்திற்கு ஏற்ப கூட்டலாம்) - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
புளி - தேவைக்கு ஏற்ப
கொத்தமல்லி - சிறிதளவு
கெட்டியான முதல் தேங்காய்பால் - 1/4 கப்
எண்ணெய், கடுகு, வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை - தாளிக்க
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் மீனை நன்கு சுத்தப்படுத்தி எடுத்துக் கொள்ள வேண்டும். புளியை தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளிக்கவும். வெங்காயம், பூண்டு, சேர்த்து வதக்கவும்.
பின்பு தக்காளி, மாங்காய் சேர்த்து வதக்கவும்.
எண்ணெய் பிரிந்து வரும் போது புளி கரைசல் ஊற்றவும்.
நன்றாக கொதிக்கும் போது மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்
எண்ணெய் பிரிந்து வரும் போது மீன் சேர்த்து ஒரு கொதி கொதிக்க விடவும்
பின்பு தேங்காய்பால் விட்டு கொதிக்க வைக்கவும். கடைசியாக கொத்தமல்லி சேர்க்கவும். பிறகு பரிமாறவும்.