மாங்காய் மீன் குழம்பு
தேவையான பொருட்கள்:
மாங்காய் - 1
புளி - ஒரு எலுமிச்சம் பழ அளவு
தக்காளி - 1
வறுத்து அரைக்க தேவையானவை:
வரமிளகாய் - 5
மல்லி விதை - 4 தேக்கரண்டி
மிளகு - 1/4 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 6
கறிவேப்பிலை - ஒரு கொத்து
தேங்காய் துருவல் - 1/2 கப்
தாளிக்க:
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
கறிவடகம் - 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 10
கறிவேப்பிலை - தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் 5 தேக்கரண்டி ஊற்றி தாளிப்பு சாமான்களை போட்டு தாளித்து தக்காளியையும் சேர்த்து வதக்கி, அரைத்த மசாலாவை போடவும். புளியை கரைத்து ஊற்றவும்.
நறுக்கிய மாங்காயை போட்டு உப்பு சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்க விட்டு எண்ணெய் தெளிந்ததும் இறக்கி பரிமாறவும்.