மலபார் எக் கறி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முட்டை - 6

வெங்காயம் - 2

இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

மல்லி தூள் - 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி

முதல் தேங்காய் பால் - 1 கப்

இரண்டாவது தேங்காய் பால் - 1 கப்

கடுகு, சீரகம் - தலா 1/4 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முட்டையை வேக வைத்து ஓடெடுத்து பாதியாக நறுக்கி வைக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

இதில் தூள் வகை எல்லாம் சேர்த்து பிரட்டவும்.

பின் இரண்டாவது தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும்.

மசாலா வாசம் போனதும் முட்டையை சேர்த்து மீண்டும் ஒரு கொதி விடவும்.

கடைசியாக முதல் தேங்காய பால் சேர்த்து கொதி வர துவங்கியதும் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: