மட்டன் மற்றும் உருளைக் குழம்பு
தேவையான பொருட்கள்:
மட்டன் - 1/2 கிலோ
உருளைக்கிழங்கு (பெரியது) - 2
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சைமிளகாய் - 2
மல்லிதூள் - 1 1/2 தேக்கரண்டி
மிளகுதூள் - 1 தேக்கரண்டி
சீரகதூள் - 1 தேக்கரண்டி
மிளகாய்தூள் - 1 தேக்கரண்டி
சோம்புதூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
தேங்காய் - கால் மூடி
முந்திரி - 10
இஞ்சி, பூண்டு விழுது - 3 தேக்கரண்டி
தயிர் - 4 தேக்கரண்டி
மல்லிதழை - 2 கொத்து
புதினா - 2 கொத்து
பட்டை - ஒரு துண்டு
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாயை நடுவில் கீறி வைத்துக் கொள்ளவும். மல்லி புதினாவை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்கை நான்காக நறுக்கி கொள்ளவும். தேங்காய் மற்றும் முந்திரிபருப்பை நன்றாக அரைத்து வைக்கவும்.
மட்டனை கழுவி சுத்தம் செய்து அதில் கரம் மசாலா, மிளகாய் தூள், தவிர்த்து எல்லா மசாலா தூள் வகையையும் சேர்க்கவும். அதில் ஒரு தேக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுது, தயிர், உப்பு சேர்த்து பிரட்டி வைக்கவும்.
பிரசர் குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வதக்கி விட்டு வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, புதினா, கரம் மசாலா, மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
தக்காளி சேர்த்து எண்ணெய் பிரிய வதக்கவும்.
மட்டனை போட்டு அரைத்த தேங்காய், முந்திரி பருப்பு விழுதை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
அதில் தண்ணீர் ஊற்றி உருளைக்கிழங்கு சேர்த்து குக்கரை மூடி 2 விசில் விடவும் ப்ரஷர் அடங்கியதும் உருளைக்கிழங்கை எடுத்து விட்டு குக்கரை மூடி 5 விசில் வரும் வரை வேக விடவும். நன்கு வெந்ததும் வேக வைத்த உருளைக்கிழங்கு, மல்லி தழை போட்டு இறக்கி பரிமாறவும்.