மட்டன் சால்னா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஆட்டு இறைச்சி (மட்டன்) - 1/2 கிலோ

பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 4

பொடியாக நறுக்கிய தக்காளி - 4

இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி

அரைக்க:

காய்ந்த மிளகாய் - 6

மிளகு - 1 தேக்கரண்டி

சோம்பு - 1 தேக்கரண்டி

கசகசா - 1 தேக்கரண்டி

பட்டை - சிறிது

கிராம்பு - 2

எண்ணெய் - 4 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஆட்டு இறைச்சியை கழுவி வைக்கவும். அரைக்க வேண்டிய பொருட்களை அரைத்து வைக்கவும்.

குக்கரில் எண்ணெயை விட்டு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, ஆட்டு இறைச்சி

சேர்த்து வதக்கவும்.

நன்கு தண்ணீர் சுண்டி வதங்கிய பின், அரைத்த மசாலா, உப்பு சேர்த்து வதக்கி, தண்ணீர் 2 டம்ளர் சேர்த்து குக்கரை மூடி 5 விசில் விட்டு இறக்கவும்.

குறிப்புகள்: