மட்டன் சாப்ஸ் குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மட்டன் - 500 கிராம்

வெங்காயம் - 25

தக்காளி - 2

கருவேப்பிலை - சிறிது

பட்டை - 1

சோம்பு - 1/2 தேக்கரண்டி

தனியா தூள் - 1 தேக்கரண்டி

எண்ணெய் - 50 கிராம்

உப்பு - தேவையான அளவு

அரைக்க:

மிளகாய் - 12

மிளகு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

சோம்பு - 1 தேக்கரண்டி

கசகசா - 1 தேக்கரண்டி

தேங்காய் - 4 சில்

இஞ்சி - சிறிது

பூண்டு - 8 பல்

மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

பட்டை - 1

கிராம்பு - 1

ஏலக்காய் - 1

செய்முறை:

அரைத்த கொடுத்துள்ள பொருட்களை அரைத்து கறியில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, சோம்பு தாளித்து நறுக்கிய வெங்காயம், தக்காளியை போட்டு வதக்கவும்.

பிறகு கறி கலவையை கொட்டி, தனியா தூள் சேர்த்து நன்கு கிளற வேண்டும். கறியை அடிப்பிடிக்காமல் கிளறினால் எண்ணெய் பிரிந்து வரும்.

2 டம்ளர் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து கடாயை மூடி கறியை வேக விட வேண்டும். கறி வெந்து குழம்பு கெட்டியானவுடன் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: