மட்டன் கோலா உருண்டை குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கொத்தின (கைமா) ஆட்டிறைச்சி - 1/2 கிலோ

பெரிய வெங்காயம் - 2 + 2

தேங்காய் - 1 மூடி

இஞ்சி - சிறு துண்டு

பூண்டு - 10 பல்

மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

தனியா தூள் - 2 தேக்கரண்டி

சோம்பு - 1/2 தேக்கரண்டி

கசகசா - 2 தேக்கரண்டி

தக்காளி - 4

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

உருளைக்கிழங்கு - 3

பட்டை - சிறிது

கிராம்பு - 2

கறிவேப்பிலை - சிறிது

கொத்தமல்லி தழை - சிறிது

எண்ணெய் - 4 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

சோம்பு, கசகசா, தேங்காய், கிராம்பு, பட்டை, மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள்,

இஞ்சி, பூண்டு சேர்த்து நன்றாக அரைக்கவும்.

இறைச்சியை கழுவி சிறிது உப்பு, அரைத்த விழுதில் பாதி, 2 வெங்காயம் சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக அரைக்கவும்.

அரைத்த விழுதுடன் சிறிது எண்ணெய் விட்டு,சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

மீதி வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு எல்லாவற்றையும் பொடியாக நறுக்கவும்.

பாத்திரத்தில்எண்ணெயை விட்டு காய்ந்தவுடன், நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்து வதக்கவும்.

சிறிது நேரம் வதக்கிய பின், மீதியுள்ள தேங்காய் மசாலாவை போட்டு, கிளறி, தேவையான தண்ணீர் சேர்க்கவும்.

கலவை நன்றாக கொதிக்கும் பொழுது, நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கு, தக்காளி, உப்பு சேர்த்து மூடி வைக்கவும்.

கிழங்கு வெந்ததும், உருட்டி வைத்துள்ள கறி உருண்டைகளை இரண்டிரண்டாக போட்டு, உருண்டைகள் வெந்ததும் இறக்கவும்.

குறிப்புகள்: