மட்டன் குழம்பு (4)
தேவையான பொருட்கள்:
மட்டன் - 1/2 கிலோ
தக்காளி - 2
வெங்காயம் (பெரியது) - 1
தேங்காய் (துருவி பால் எடுக்கவும்) - பாதி மூடி
தனியா - 2 மேசைக்கரண்டி
சீரகம் - 2 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
கருவேப்பிலை - சிறிது
மசாலாதூள் - 3 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - சிறிது
கொத்தமல்லி இலை - சிறிது
எண்ணெய் - 6 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் கறியை சுத்தம் செய்துவைக்கவும்.
தக்காளி,வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
தனியாவையும்,சீரத்தையும் சிவக்க வறுத்து அரைத்துக்கொள்ளவும்.
அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும்,கருவேப்பிலை வெங்காயம் போட்டு வதக்கி,தக்காளியை போட்டு வதக்கவும்.
பின் கறியை சேர்த்து தேங்காய்பால், மசாலாதூள்,மஞ்சள்தூள்,உப்பு போட்டு வதக்கவும்.பின் தூளக்கிய மசாலாவை போட்டு கறிவேகும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி கொதித்ததும் மிதமான தீயில் வைத்து கறி நன்கு வெந்ததும் கொத்தமல்லி இலை தூவி இறக்கி பரிமாறவும்.