மட்டன் குழம்பு (3)
தேவையான பொருட்கள்:
சுத்தம் செய்த மட்டன் - 1/2 கிலோ
வட்டமாக நறுக்கி சின்ன வெங்காயம் - 1/2 கப்
நீளமாக கீறிய பச்சை மிளகாய் - 3
நசுக்கிய இஞ்சி - 1 அங்குலம் அளவு
நசுக்கிய பூண்டு - 10 பல்
நறுக்கிய தக்காளி - 2
சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
அரைக்க:
தேங்காய் -- 1 துண்டு
மிளகு - 3/4 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
சோம்பு - 1/4 தேக்கரண்டி
கசகசா - 1/4 தேக்கரண்டி
முந்திரி பருப்பு - 10 என்னம்
தாளிக்க:
பட்டை - 1 அங்குலம் அளவு
கிராம்பு - 4
அன்னாசிப்பூ - 1
செய்முறை:
குக்கரில் 1 ஸ்பூன் எண்ணைய் விட்டு கறியுடன் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து வேகவிடவும்.
பாதி வெந்த பின் சாம்பார் பொடி போட்டு 2 கப் தண்ணீர் விட்டு வேகவிடவும்.
ஒரு கொதி வந்ததும் அரைத்த கலவையை ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்.
வாணலியில் எண்ணைய் ஊற்றி தாளிக்க வேண்டியவை களை தாளித்து தக்காளியை போட்டு நன்கு வதக்கி அதை கொதிக்கும் கல்வையில் கொட்டி குக்கரை மூடி ஸ்ட்ரீம் வந்ததும் வெயிட் போட்டு ஹைய்யில் ஒரு விசில் வந்ததும் சிம்மில் வைத்து 20 நிமிடம் வைக்கவும்.
குறிப்புகள்:
இது இட்லிக்கு வைக்கும் குழம்பு