பரோட்டா சால்னா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஆட்டுக்கறி (அல்லது) கோழிக்கறி - 1/4 கிலோ

பச்சை மிளகாய் - 2

பெரிய வெங்காயம் - 1

தக்காளி - 2

இஞ்சி பூண்டு விழுது - 3 தேக்கரண்டி

மல்லிக்கீரை - ஒரு கட்டு

மிளகாய்தூள் - 3 தேக்கரண்டி

மல்லித்தூள் - 4 தேக்கரண்டி

கரம் மசாலாத்தூள் - 2 தேக்கரண்டி

தேங்காய் விழுது - 4 தேக்கரண்டி

கடலை மாவு - 2 தேக்கரண்டி

ஏலக்காய், கிராம்பு, அன்னாசிப்பூ - தலா ஒன்று

பட்டை - ஒரு இன்ச்

சிக்கன் க்யூப் - அரை க்யூப்

தண்ணீர் - சுமார் 3/4 லிட்டர்

எண்ணெய் - 5 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கறியை சுத்தம் செய்து அத்துடன் பாதி இஞ்சி பூண்டு விழுது, பாதி உப்பு சேர்த்து பிரட்டிக்கொள்ளவும்.

பச்சை மிளகாயை நீளவாக்கில் வகுந்து, மல்லிக்கீரையை நைசாக நறுக்கிக் கொள்ளவும்.

வெங்காயத்தை நீளவாக்கில் நைசாக நறுக்கி, தக்காளியையும் நைசாக நறுக்கிக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானவுடன் எண்ணெய் ஊற்றி ஏலக்காய், பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ அனைத்தையும் போட்டு வாசம் வந்தவுடன் பச்சை மிளகாய், பாதி வெங்காயத்தை ஒன்றன்பின் ஒன்றாக போடவும்.

வெங்காயம் முறுக ஆரம்பிக்கும்போது மீதி இஞ்சி பூண்டு விழுது போட்டு தீயாமல் முறுகவிடவும்.

பிறகு மல்லிக்கீரை போட்டு வதக்கி ஒரு ஸ்பூன் மிளகாய்தூள் போட்டு தாளித்து, உடனே பிரட்டி வைத்துள்ள கறி மற்றும் தக்காளி, மீதி வெங்காயத்தை கொட்டி நன்றாக வதக்கி, பிறகு தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.

கறி பதமாக வெந்த பிறகு கரம் மசாலாத்தூள், மீதி 2 ஸ்பூன் மிளகாய்தூள், மல்லித்தூள், மீதி உப்பு, தேங்காய் விழுது, சிக்கன் க்யூப், கடலை மாவு அனைத்தையும் சிறிது தண்ணீரில் கரைத்து வெந்த கறியில் ஊற்றி சிறிது நேரம் மூடி போட்டு, 2 கொதிவந்தவுடன் இறக்கி பரோட்டா உடன் பரிமாறவும்.

குறிப்புகள்: