நெத்திலி கருவாடு தொக்கு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சுத்தம் செய்த நெத்திலி கருவாடு - 2 கப்

கெட்டித்தேங்காய்ப்பால் - 1 கப்

வெங்காயம் - 2

சிவப்புநிற தக்காளி - 4

கறிவேப்பிலை - சிறிது

புளி கரைசல் - 1/4 கப்

காஷ்மீரி மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி

தனியாதூள் - 1 தேக்கரண்டி

மல்லித்தழை - சிறிது

எண்ணெய் - 1/4 கப்

செய்முறை:

வெங்காயம், தக்காளி இரண்டையும் பெரிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் நன்கு அரைத்துக்கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து அரைத்தவிழுது, கறிவேப்பிலை, எண்ணெய் சேர்த்து நன்கு வதக்கவும்.

பச்சை வாசனை போய், எண்ணெய் பிரிந்ததும், மிளகாய், தனியா தூள், உப்பு சேர்க்கவும்.

பின்னர் கருவாடு சேர்த்து கிளறிவிடவும்.

புளிகரைசல் சேர்த்து கொதி வந்ததும் தேங்காய்ப்பால் சேர்த்து சிம்மில் வைக்கவும்

குழம்பு கெட்டி ஆகி தொக்குப்பதத்தில் வந்ததும் நறுக்கிய மல்லித்தழை தூவி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

கருவாட்டில் எப்போதும் சற்று உப்பு அதிகம் இருக்குமென்பதால் அதைப் பார்த்துக் கொண்டு குழம்பில் உப்பை திட்டமாகச் சேர்க்கவும்.