நெத்திலிக் கருவாடு குழம்பு
தேவையான பொருட்கள்:
நறுக்கிய சுரைக்காய் -1 கப்
நெத்திலிக்கருவாடு -20
புளிகரைசல் - 1/4 கப்
மஞ்சள்பொடி -1/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
வறுத்து அரைக்க:
சின்னவெங்காயம் - 10
தனியா - 1/2 ஸ்பூன்
காய்ந்தமிளகாய் - 2
பூண்டு - 2 பல்
சீரகம் - 1/4 தேக்கரண்டி
தேங்காய்துறுவல் -1/4 கப்
தக்காளி - 1
எண்ணை -1 தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணை - 1 தேக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
செய்முறை:
கருவாட்டை சுடுதண்ணீரில் 10 நிமிடம் ஊறவைத்து நன்கு அலசிவைக்கவும்.
வறுத்து அரைக்க குடுத்தவற்றை எண்ணையில் வறுத்து நன்கு அரைத்துவைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணை ஊற்றி கடுகு,வெந்தயம் போட்டு பொரிந்தவுடன் கறிவேப்பிலை போட்டு சுரைக்காய் போடவும்.
காய் நன்கு வதங்கியவுடன் அரைத்தவிழுது,புளிக்கரைசல் சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி மஞ்சள்பொடி,உப்பு போட்டு மூடிவைத்து வேகவிடவும்.
காய் வெந்தவுடன் கருவாடு போட்டு 5நிமிடம் கொதித்து குழம்பு சற்று கெட்டியானவுடன் இறக்கி பரிமாறவும்.