நாஞ்சில் நாட்டு மீன் குழம்பு (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மீன் - 500 கிராம்

துருவிய தேங்காய் - 3/4 கப்

சின்ன வெங்காயம் - 5 (அல்லது) 6

மிளகு - 1 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி அல்லது காரத்திற்கு ஏற்ப

தனியாத் தூள் - 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 4

புளி - 1 சிறிய எலுமிச்சை அளவு

கறிவேப்பிலை - 2 கொத்து

தேங்காய் எண்ணெய் (தேவைப்பட்டால்) - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மீனை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும். முடிந்தால் தோலை நீக்கி கொள்ளவும்.

துருவிய தேங்காய், மிளகு, மிளகாய் தூள், தனியாத் தூள், மஞ்சள் தூள், சின்ன வெங்காயம், ஒரு கொத்து கறிவேப்பிலை ஆகியவற்றை மிக்ஸியில் நன்றாக மை போல அரைத்து கொள்ளவும்.

புளியை ஊற வைத்து கரைத்து கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் வெட்டி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் அரைத்த மசாலா, புளிகரைசல், உப்பு, பச்சை மிளகாய், மீதமுள்ள கறிவேப்பிலை, சிறிது தண்ணீர் சேர்த்து கலக்கவும்.

உப்பு, புளி காரம் சரியாக இருக்கிறதா என பார்த்து கொள்ளவும். இதனுடன் மீன் துண்டுகளை சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.

நன்கு கொதி வந்து மீன் வெந்ததும் 5 நிமிடங்கள் சிம்மில் வைத்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

தேவைப்பட்டால் சிறிது தேங்காய் எண்ணெய் அடுப்பிலிருந்து இறக்கும் போது சேர்க்கலாம்.