நண்டு மசாலாக் குழம்பு
தேவையான பொருட்கள்:
நண்டு - 10 அல்லது 12
பொடியாக அரிந்த தக்காளி - 3 கப்
பொடியாக அரிந்த வெங்காயம் - 2 கப்
பொடியாக அரிந்த கொத்தமல்லி -1 கப்
கறிவேப்பிலை - ஒரு கை
தேங்காய் - 1
துருவிய இஞ்சி - 2 மேசைக்கரண்டி
நசுக்கிய பூண்டு - 2 மேசைக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 5 மேசைக்கரண்டி
கொத்தமல்லித்தூள் - 1 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
எண்ணெய் -6 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்துத் தூளாக்கவும்:
மிளகு - 1 மேசைக்கரண்டி
சோம்பு - 2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
பச்சரிசி - 2 மேசைக்கரண்டி
புழுங்கலரிசி - 2 மேசைக்கரண்டி
செய்முறை:
பெரிய அகன்ற வாணலி எடுத்து அடுப்பில் வைத்து சூடாக்கவும்.
எண்ணெயை ஊற்றி அது சூடானதும் வெங்காயத்தைப் போட்டு நன்கு குழைய வதக்கவும்.
அதன் பின் தக்காளி, மஞ்சள் தூளைச் சேர்த்து அது மசிந்து மேலே எண்ணெய் தெளியும்வரை வதக்கவும்.
சுத்தம் செய்த நண்டுகளைச் சேர்த்து தூள்களுடன் தேவையான உப்பு, சிறிது நீர் சேர்த்து வேக வைக்கவும்.
சில நிமிடங்கள் கழித்து தேங்காய், இஞ்சி, பூண்டு, சோம்பு இவற்றை மையாக அரைத்து சேர்க்கவும். கறிவேப்பிலை,கொத்தமல்லியைச் சேர்க்கவும்.
குழம்பு நன்கு கொதித்து நண்டுத்துண்டங்களும் வெந்த பிறகு பொடியைத் தூவி நன்கு கலந்து சில நிமிடங்கள் குறைந்த தீயில் சமைத்து இறக்கி பரிமாறவும்.