நண்டு குழம்பு (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

நண்டு - 1 கிலோ

சாம்பார் பொடி - 1 1/2 மேசைக்கரண்டி

நறுக்கிய வெங்காயம் - 1 கப்

நறுக்கிய தக்காளி - 2

கறிவேப்பிலை - 2 இனுக்கு

அரைக்க - 1:

சோம்பு - 1 தேக்கரண்டி

பூண்டு - 10 பல்

அரைக்க - 2:

தேங்காய் - 1 மூடி (தனியாக நைசாக அரைக்கவும்)

செய்முறை:

அடிகனமான பாத்திரத்தில் எண்ணைய் 2 தேக்கரண்டி ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு ஒரு வதக்கு வதக்கி அதனுடன் கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

அதனுடன் அரைக்க - 1 யை சேர்த்து வாசம் போகும் வரை நன்கு வதக்கி பின் சாம்பார் பொடி சேர்த்து வதக்கி தேவையான தண்ணீர் சேர்த்து கொதி வந்ததும் நண்டு, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

2 நிமிடம் கழித்து அரைத்த தேங்காயை ஊற்றி கொதித்து குழம்பு பதம் வந்ததும் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: