நண்டு குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

நண்டு - 1 1/2 கிலோ

முருங்கைக் கீரை - 2 கைப்பிடியளவு

தேங்காய் பால் (முதல் பால்) - 1 கப்

பெரிய வெங்காயம் - 3

தக்காளி - 4

பச்சை மிளகாய் - 3

கறிவேப்பிலை - சிறிதளவு

இஞ்சி, பூண்டு விழுது - 3 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

வறுத்து பொடிக்க:

சோம்பு - 1 தேக்கரண்டி

பட்டை (2 இன்ச் அளவு) - ஒரு துண்டு

ஏலக்காய் - 4

கிராம்பு - 4

சாதிக்காய் (2 ஏலக்காயின் அளவு) - ஒரு துண்டு

கறிவேப்பிலை - 2 கொத்து

தேங்காய் துருவல் - 1/2 கப் (வறுத்து அரைக்க)

தாளிக்க:

கடுகு - அரை தேக்கரண்டி

வெந்தயம் - ஒரு தேக்கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

நண்டை சுத்தம் செய்து கழுவி மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி வைக்கவும்.

முருங்கைக் கீரையை கழுவி வைக்கவும். பொடிக்க வேண்டியவற்றை வெறும் கடாயில் கறிவேப்பிலை நொறுங்கும் வரை வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். தேங்காயை சிவக்க வறுத்து அரைத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் நண்டு, தக்காளி, முருங்கைக் கீரை மற்றும் உப்பு சேர்த்து மூடிபோட்டு 10 நிமிடங்கள் வேகவிடவும்.

10 நிமிடங்கள் கழித்து மிளகாய் தூள் மற்றும் 2 கப் தண்ணீர் ஊற்றி மீண்டும் வேகவிடவும்.

அனைத்தும் சேர்ந்து நன்கு வெந்ததும், பொடித்த பொடி, தேங்காய் விழுது, மற்றும் தேங்காய் பால் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

சாதம், இடியாப்பம், புட்டு ஆகியவற்றுடன் சாப்பிட சூப்பரான நண்டு குழம்பு தயார்.