தாளிச்சா (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஆட்டுக்கறி எலும்போடு - 1/2 கிலோ

துவரம்பருப்பு - 1 கப்

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 மேசைக்கரண்டி

தக்காளி - 2

பெரிய வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 3

கத்திரிக்காய் சின்னதானால் - 2

உருளைக்கிழங்கு - 2

கேரட் - 1

மாங்காய் - 1

வாழைக்காய் - 1

பட்டை - 2 துண்டு

கிராம்பு - 4

மிளகாய்பொடி - 2 தேக்கரண்டி

சீரகப்பொடி - 1 தேக்கரண்டி

மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி

மிளகுப்பொடி - 1/2 தேக்கரண்டி

கரம் மசாலாப்பொடி - 1 தேக்கரண்டி

அரைத்த தேங்காய் விழுது - 1 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

செய்முறை:

முதலில் இறைச்சியை கழுவி அதில் பாதி இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் மிளகாய்பொடி தவிர்த்து, அனைத்து மசாலாப்பொடி, உப்பு போட்டு பிசறி வைக்கவும்.

பின்பு வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும். தக்காளியை எட்டாக வெட்டி வைக்கவும். மல்லி புதினாவை ஆய்ந்து கழுவி வைக்கவும்.

துவரம் பருப்பை கழுவி 2 கப் தண்ணீர்விட்டு குக்கரில் 4 நிமிடங்கள் வேகவைத்து தனியே எடுத்து வைக்கவும். புளியை சுடுத்தண்ணீரில் ஊற வைக்கவும்.

தேங்காயை மசிய அரைத்துக் கொள்ளவும். பின்பு குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு போட்டு சிவந்ததும் அதில் வெங்காயத்தைப்போட்டு சுருள வதக்கவும்.

கலர் மாறும் தருவாயில் பச்சை மிளகாய், தக்காளி போட்டு வதக்கவும். பின்பு மிளகாய்தூள் போட்டு கிளறவும்.

மேலும் அதில் மீதமுள்ள இஞ்சி பூண்டைப்போட்டு பச்சை வாசனை போகும் வரை கிளறி, அதில் மல்லி புதினாவை போடவும்.

அதில் பிசறி வைத்திருக்கும் கறியை போட்டு நன்றாக கிளறி அதில் இறைச்சி மூழ்கும் அளவு தண்ணீர்விட்டு உப்பு தேவையானால் போட்டு குக்கரை மூடி இறைச்சி நன்றாக வேகும்அளவு வெயிட் போட்டு வேகவிடவும்.

வேகும் நேரத்தில் காய்கறிகளை கத்திரிக்காய், உருளை, வாழைக்காய், மாங்காய் ஆகியவற்றை 2 அங்குல துண்டங்களாக நறுக்கி வைக்கவும்.

கேரட்டை வட்டமாக நறுக்கி வைக்கவும். புளியை கரைத்து வைக்கவும்.

இறைச்சி வெந்த பின்பு மாங்காய் தவிர்த்து அனைத்து காய்களையும் குழம்பில் போட்டு வேகவிடவும்.

முக்கால் பாகம் வெந்து வரும் போது அதில் மாங்காயை போடவும். பாதி வெந்திருக்கும் நிலையில் கரைத்து வைத்துள்ள புளி மற்றும் வேக வைத்த துவரம் பருப்பு, தேங்காய் விழுது ஆகியவற்றை குழம்பில் விடவும் மேலும் கறிவேப்பிலையை கொத்தாக போடவும்.

தீயை மிதமாக்கி கொதிக்கவிடவும். காய் மற்றும் புளி, பருப்பு சேர்த்தவுடன் உப்பு போதுமானதாக இருக்காது. மீண்டும் உப்பு சரி பார்த்து தேவையானால் சேர்க்கவும். குழம்பு கொதித்தவுடன் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: