தாளிச்சா (1)
தேவையான பொருட்கள்:
ஆட்டிறைச்சி - 150 கிராம்
துவரம்பருப்பு - 3/4 டம்ளர்
பீன்ஸ் - 6 அல்லது 8
சிறிய கேரட் - 1
சிறிய உருளை - 19
கத்தரிக்காய் - 3
சிறிய மாங்காய் - 1
மஞ்சள்பொடி - 1/4 தேக்கரண்டி
மிளகாய்ப்பொடி - 1 தேக்கரண்டி
மல்லித்தழை - சிறிது
எலுமிச்சை (விரும்பினால்) - 1
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 தேக்கரண்டி
பட்டை - சிறு துண்டு
ஏலம் - 2
மல்லித்தழை, புதினா - சிறிது
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
செய்முறை:
துவரம்பருப்பு, ஆட்டிறைச்சி, மஞ்சள்பொடி சேர்த்து குக்கரில் வேக வைத்துக்கொள்ளவும்.
பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு, மாங்காயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
வெந்த பருப்புடன் காய்கள், மல்லித்தழை, உப்பு, பாதிஅளவு மிளகாய்த்தூள் சேர்த்து குக்கரில் காய்களை வேக வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு ஏலம், பட்டை தாளித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வாசனை வரும் வரை கிளறவும்.
பொடியாக நறுக்கிய மல்லி, புதினா சேர்க்கவும்.
மீதி உள்ள மிளகாய்த்தூளை சேர்த்துக்கிளறி வெந்த பருப்பில் சேர்க்கவும்.
உப்பு எலுமிச்சையை விதைகள் நீக்கி ஸ்பூனால் நன்கு மசித்து தாளிச்சாவில் சேர்த்து மேலும் கொதிக்க விட்டு சூடாக பரிமாறவும்.