செட்டிநாடு சிக்கன்
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 500 கிராம்
எண்ணெய் - 75 மி. லி
வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 100 கிராம்
பட்டை, இலவங்கம், ஏலக்காய் - தலா 2 கிராம்
சீரகம் - 5 கிராம்
கறிவேப்பிலை - 2 கிராம்
மஞ்சள் தூள் - 10 கிராம்
கொத்தமல்லித் தழை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
அரைக்க:
வெங்காயம் - 100 கிராம்
இஞ்சி, பூண்டு - தலா 50 கிராம்
சோம்பு - 50 கிராம்
சீரகம் - 20 கிராம்
மிளகு - 25 கிராம்
காய்ந்த மிளகாய் - 10 கிராம்
தேங்காய் - 100 கிராம்
செய்முறை:
சிக்கனை சுத்தம் செய்து கொள்ளவும். அரைக்க கொடுத்துள்ளப் பொருட்களை நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
சிக்கனுடன் அரைத்த விழுதைச் சேர்த்து ஊற வைக்கவும். (வெங்காயம், தக்காளி வதங்கும் வரை ஊறினால் போதும்).
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, இலவங்கம், ஏலக்காய் மற்றும் சீரகம் சேர்த்து பொரிய விடவும்.
அதனுடன் வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
ஊற வைத்த சிக்கனைச் சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் வதக்கவும். பிறகு தேவையான அளவு நீர் ஊற்றி மூடிபோட்டு வேக விடவும்.
சிக்கன் நன்கு வெந்து கிரேவி கெட்டியாக ஆனதும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
இது காரசாரமாக இருக்கும். எனவே காரம் உங்களுக்கு பிடித்தாற்போல் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ சேர்த்துக் கொள்ளலாம்.