சிம்பிள் சிக்கன் குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/4 கிலோ

சின்ன வெங்காயம் - 10

தக்காளி - 2

பூண்டு - 6 பல்

சோம்பு தூள் - 1 தேக்கரண்டி

சீரகத் தூள் - 1/2 தேக்கரண்டி

தனியா தூள் - 3 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

ஆச்சி சிக்கன் மசாலா - 2 மேசைக்கரண்டி

மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

சோம்பு - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 10

கொத்தமல்லித் தழை - சிறிது

இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி

தேங்காய்ப் பால் - 1 கப்

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சிக்கனைச் சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியைப் பொடியாக நறுக்கி வைக்கவும். வெங்காயம் மற்றும் பூண்டை நசுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சோம்பு தாளித்து, பூண்டு, வெங்காயம் மற்றும் கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி மற்றும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

தக்காளி லேசாக வதங்கியதும் சிக்கனைச் சேர்த்து வதக்கவும்.

சிக்கன் நன்றாக வதங்கியதும் உப்பு மற்றும் தூள் வகைகள் சேர்க்கவும்.

சிக்கனுடன் அனைத்தும் ஒன்றாக்ச் சேர்ந்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

எண்ணெய் பிரிந்து வந்ததும் சிறிது தண்ணீர் சேர்த்து சிக்கனை வேகவிடவும். சிக்கன் வெந்ததும் தேங்காய்ப் பால் சேர்த்து கொதிக்கவிடவும்.

குழம்பு கொதித்து நன்கு திக்கானதும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

வெங்காயம், பூண்டை நசுக்கிச் சேர்த்து வதக்குவதால் நல்ல மணமாக இருக்கும்.