சிக்கன் குழம்பு (3)
தேவையான பொருட்கள்:
கோழி - 3/4 கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 1
சாம்பார் பொடி - 4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
முந்திரி - 10
தயிர் - 4 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
மிளகு - 1 தேக்கரண்டி
பட்டை - 1 துண்டு
லவங்கம் - 4
கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு - தாளிக்க (விரும்பினால்)
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கோழியை சுத்தம் செய்து மஞ்சள் தூள், உப்பு, தயிர், சாம்பார் பொடி பாதி சேர்த்து பிரட்டி ஊற வைக்கவும்.
முந்திரியை நீர் விட்டு ஊற வைக்கவும்.
கறிவேப்பிலை பாதி, பட்டை, லவங்கம் மூன்றையும் வெறும் கடாயில் வறுத்து மிளகு சேர்த்து பொடிக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்க விரும்பினால் தாளிக்கவும். பின் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பாதி வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பச்சை வாசம் போனதும் தக்காளி, மீதம் உள்ள சாம்பார் பொடி சேர்த்து நன்றாக வதக்கவும்.
இதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து பிரட்டி நன்றாக மூடி வேக விடவும்.
சிக்கன் நீர் விடும் நாம் விட தேவை இல்லை. சிக்கன் வெந்ததும் பொடித்த தூள் சேர்த்து தேவையான நீர் விட்டு உப்பு போட்டு கொதி விடவும்.
எண்ணெய் பிரியும் போது ஊற வைத்த முந்திரியை நைசாக அரைத்து ஊற்றி எண்ணெய் பிரிய கொதிக்க விட்டு எடுக்கவும்.