சிக்கன் குழம்பு ஈஸி முறை

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ

பெரிய வெங்காயம் - 1

சின்ன வெங்காயம் - 5

தக்காளி (தேவைப்பட்டால்) - 1 சிறியது

இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி

தேங்காய் பால் - 3 தேக்கரண்டி

சீரகம், மிளகு, சோம்பு - தலா 1 தேக்கரண்டி

குழம்பு பொடி - 1 தேக்கரண்டி

கொத்தமல்லி இலை - சிறிது

நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சிக்கனை கழுவி சுத்தம் செய்து வைக்கவும், சின்ன, மற்றும் பெரிய வெங்காயம்,தக்காளி நறுக்கி கொள்ளவும்

கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம், சீரகம், மிளகு, சோம்பு சேர்த்து வதக்கி விழுதுபோல் அரைத்து கொள்ளவும்

ஒரு பெரிய கடாயில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி, பெரிய வெங்காயத்தை வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பின் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்

இதனுடன் சிக்கனை சேர்த்து நன்றாக பிரட்டிவிட்டு பின் அரைத்தவிழுது, குழம்பு பொடி, தேங்காய்பால்,உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவிடவும்

சிக்கன் வெந்தபின் கொத்தமல்லி இலை தூவி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: