கோவா சிக்கன்
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 1
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
அரைக்க:
இஞ்சி - சிறுத் துண்டு
பூண்டு - 5
பட்டை - சிறுத் துண்டு
மல்லி - 2 மேசைக்கரண்டி
சீரகம் - 2 மேசைக்கரண்டி
வரமிளகாய் - 6
கிராம்பு - 4
மிளகு - 1 மேசைக்கரண்டி
செய்முறை:
சிக்கனுடன் உப்பு, மஞ்சள் தூள், சிறிது மிளகாய் தூள் கலந்து சிறிது நேரம் வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்கவும்
பச்சை வாசனை போனதும், தக்காளி போட்டு வதக்கவும்
அதன் பின், அரைத்து வைத்து இருக்கும் கலவையை இதனுள் ஊற்றி கலந்து விடவும். தேவைக்கேற்ப தண்ணீர் விட்டு கலக்கவும்.
கொதி வந்த பின்பு, சிக்கன் துண்டு, உப்பு போட்டு கலக்கி மூடி வைக்கவும்.
5 - 10 நிமிடம் ரெண்டு விசில் விட்டு இறக்கி, பரிமாறலாம்.
குறிப்புகள்:
சப்பாத்தி மற்றும் எல்லா வகையான சாதத்துக்கும் ஏற்ற சைடு டிஷ்