கோழி வறுத்தரைத்த குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வறுக்க:

சின்ன வெங்காயம் - 2

சோம்பு - 1/2 தேக்கரண்டி

தேங்காய் துருவல் - 1 கப்

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

மல்லித் தூள் - 3/4 தேக்கரண்டி

மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி

தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி

குழம்பிற்கு:

கோழிக்கறி - 1/2 கிலோ

வெங்காயம் - 2

பச்சை மிளகாய் - 2

இஞ்சி மற்றும் பூண்டு விழுது - 2 தேக்கரண்டி

தக்காளி - 1

கறிவேப்பிலை - 10 இலை

கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி

எண்ணெய் - 3 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். கோழிக்கறியை சுத்தம் செய்து கழுவி தண்ணீரை வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் சின்ன வெங்காயம், சோம்பு போட்டு பொரிந்ததும் தேங்காய் துருவலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

அதன் பின்னர் பொடி வகைகள் அனைத்தையும் சேர்த்து மிதமான தீயில் வைத்து மேலும் 5 நிமிடம் வதக்கவும்.

வதக்கியவற்றை எடுத்து ஆற வைத்து தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

அதன் பிறகு தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி விடவும்.

அதனுடன் சுத்தம் செய்து வைத்திருக்கும் கோழியை போட்டு தேவையான அளவு உப்பு, அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுது சேர்த்து கிளறி விடவும். ஒரு கொதி வந்ததும் தீயை மிதமாக வைத்து 35 நிமிடம் சிக்கனை வேக விடவும்.

சுவையான கோழி வறுத்தரைத்த குழம்பு தயார்.

குறிப்புகள்:

இது கீ ரைஸ், ப்ளைன் ரைஸ், பரோட்டா, சப்பாத்தி, இடியாப்பம், புட்டு என எல்லாவற்றிக்கும் பொருந்தும்.