கோழி மசாலாக் குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோழித்துண்டுகள் - 1 கிலோ

அரிந்த வெங்காயம் - 2

அரிந்த தக்காளி -2

தக்காளி அரைத்த விழுது - 1/2 கப்

சின்ன வெங்காயம் பொடியாக அரிந்தது - 1/2 கப்

பூண்டு இஞ்சி விழுது - 1 மேசைக்கரண்டி

உருளைக்கிழங்கு - 2

மிளகாய்த்தூள் - 1 மேசைக்கரண்டி

கொத்தமல்லித்தூள் - 2 மேசைக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

சோம்புப்பொடி - 1 தேக்கரண்டி

எண்ணெய் - 4 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

அரிந்த கொத்தமல்லி - 1/2 கப்

கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி

கீழ்க்கண்ட பொருள்களை மிருதுவாக அரைக்கவும்:

தேங்காய்த்துருவல் - 1 கப்

கசகசா - 1 மேசைக்கரண்டி

சோம்பு - 1 மேசைக்கரண்டி

பட்டை இலை - 1

சின்ன வெங்காயம் - 6

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் அரிந்த சின்ன வெங்காயம், அரைத்த தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கொத்தமல்லித்தூள், சிறிய துண்டங்களாக அரிந்த உருளைக்கிழங்குகள், தேவையான நீர் சேர்த்து வேக வைக்கவும்.

உருளைக்கிழங்கு சிறிது வெந்ததும் கோழியை தேவையான உப்பைச்சேர்த்து வேக வைக்கவும்.

கோழி பாதி வெந்ததும் அரைத்த மசாலா சேர்த்து கொதிக்க வைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் சோம்புப்பொடி போட்டு அரிந்த வெங்காயம், அரிந்த தக்காளி, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து குழைய வதக்கி கொதிக்கும் குழம்பில் சேர்த்து மேலும் சில நிமிடங்கள் குழம்பு கொதித்ததும் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: