கோழி குழம்பு (8)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோழி - 1/2 கிலோ

பெரிய வெங்காயம் - 2

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி

மிளகாய் தூள் -1/2 தேக்கரண்டி

தனியா தூள் - 1 தேக்கரண்டி

வெஜ் பிரியாணி அல்லது புலாவ் மசாலா - 2 தேக்கரண்டி

மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - 3 மேசைகரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கடாயில் எண்ணெய் ஊற்றி நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை போடவும். நன்கு பொரிந்ததும் எடுத்து தனியாக வைக்கவும்.

அதே எண்ணெயில் கோழி துண்டுகளை இட்டு அரைவேக்காடாக பொரிக்கவும்.

அதற்குள் எல்லாத் தூள்களையும் ஒரு கப் நீரில் கரைத்துக்கொள்ளவும்.அத்துடன் உப்பு,மற்றும் பொரித்த வெங்காயமும் சேர்த்து கோழியில் ஊற்றவும்.

கோழி வெந்ததும் மேலாக சிறிது பெப்பர் தூவி சற்று கிளறி பின் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: