கோழி குழம்பு (4)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோழிக்கறி - 1/2 கிலோ

பெரிய வெங்காயம் - 2

தக்காளி - 2

பச்சை மிளகாய் - 2- 2

மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி அல்லது விருப்பத்திற்கு ஏற்ப

இஞ்சி பூண்டு விழுது - 3 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

அரைக்க:

தேங்காய் - பாதி மூடி

சோம்பு - 1 தேக்கரண்டி

மிளகு - 1/2 தேக்கரண்டி

தாளிக்க:

எண்ணெய் - தேவையான அளவு

சோம்பு - 1/2 தேக்கரண்டி

லவங்கம், ஏலக்காய் - தலா இரண்டு

பிரிஞ்சி இலை, பட்டை - விருப்பத்திற்கு ஏற்ப

கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - சிறிது

செய்முறை:

கறியை சுத்தம் செய்து வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து அதனுடன் வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை கிளறவும்.

பின் கறியை அதனுடன் சேர்த்து நன்றாக கிளறவும்.அதனுடன் அரைத்த விழுது மற்றும் மிளகாய் தூள் சேர்க்கவும்.

ஐந்து நிமிடம் வதக்கிய பின் மூன்று டம்ளர் தண்ணீர் சேர்க்கவும்.

15 நிமிடம் குழம்பை கொதிக்க வைக்கவும்.(மிளகாய் தூள் காரம் போகும் வரை)

குழம்பு சுண்டி வந்ததும் வேறு பாத்திரத்திற்கு மாற்றி கொத்தமல்லி இலை தூவி

குறிப்புகள்:

கோழி கறி எளிதில் வெந்துவிடும் அதனால் அவரவர் விருப்பத்திற்கு குழம்பை தண்ணியாகவோ திக்காகவோ வைக்கலாம்.

குழம்பு மிளகாய் தூள் மட்டும் சேர்த்துள்ளேன் காரம் வேண்டியவர்கள் ஒரு தேக்கரண்டி தனி மிளகாய்தூள் சேர்த்து செய்யலாம்.

சூடான சாதத்துடன் பரிமாறவும்.