கோழி குழம்பு (3)
தேவையான பொருட்கள்:
கோழி - 1 கிலோ
பட்டை - 1
ஏலக்காய் - 3
லவங்கம் - 2
பச்சை மிளகாய் - 2
புதினா - ஒரு கைப்பிடி
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
இஞ்சி பூண்டு விழுது - 4 தேக்கரண்டி
வெங்காயம் - 2
தக்காளி - 3
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
தேங்காய் - கால் மூடி
கறிமசாலா தூள் - 6 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தேங்காயை நைஸாக அரைத்துக்கொள்ளவும். கடைசியில் கறிமசாலா தூளை சேர்த்து அரைத்து (தேங்காயுன் தூள் நன்கு ஒட்டுவதற்காக) பின் நீரில் கரைத்துக்கொள்ளவும்
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பட்டை,ஏலக்காய்,லவங்கம் சேர்க்கவும்
பின் பச்சை மிளகாய்,புதினா,கொத்தமல்லி சேர்த்து சுருள விடவும்
வெங்காயம் சேர்த்து பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்
பச்சை வாசனை போனதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்க்கவும்.
பின் தக்காளியை சேர்த்து குழைய விடவும்
மசாலாவில் எண்ணெய் பிரிந்து வந்ததும் கரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்க்கவும். தேவைக்கு உப்பும் சேர்க்கவும்
நன்கு கொதி வந்த பிறகு கோழியை சேர்க்கவும். வெந்ததும் பரிமாறலாம்.