கோழி குழம்பு
தேவையான பொருட்கள்:
கோழி - அரை கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 2
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி
தயிர் - ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை - சிறிது
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
தனியா தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
தாளிக்க:
சோம்பு - 1/2 தேக்கரண்டி
பட்டை - சிறிது
கிராம்பு - 2
பட்டை இலை - 1
கறிவேப்பிலை - சிறிது
அரைக்க:
தேங்காய் - பாதி
சோம்பு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி
கசகசா - 1 தேக்கரண்டி
முந்திரி - 6 அல்லது 7
செய்முறை:
குக்கரில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, நறுக்கிய வெங்காயம் மற்றும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி மற்றும் உப்புச் சேர்த்து நன்கு வதக்கி, அத்துடன் சுத்தம் செய்த கோழி மற்றும் தூள் வகைகள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
அதனுடன் தயிர் சேர்த்து பிரட்டவும்.
அனைத்தும் ஒன்றாகச் சேரும்படி நன்கு கிளறவும்.
நன்றாகக் கிளறிவிட்டு, குக்கரை மூடி 2 விசில் வரும் வரை வைத்திருந்து இறக்கவும்.
விசில் அடங்கியதும் குக்கரைத் திறந்து அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்து ஊற்றி கொதிக்கவிடவும். நன்கு கொதித்ததும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கி பரிமாறவும்.