கீழை மீன் குழம்பு
தேவையான பொருட்கள்:
மீன் துண்டுகள் - 6 அல்லது 8
தனியாத்தூள் - 2 மேசைக்கரண்டி
மஞ்சள்தூள் - 1 பின்ச்
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
தேங்காய் - 1 மூடி
புளி - எலுமிச்சம்பழம் அளவு
உப்பு - தேவையான அளவு
பிசைந்து கொள்ள:
தக்காளி - 2
வெங்காயம் - 1
மல்லித்தழை - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
பச்சைமிளகாய் - 2
தாளிக்க:
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
சோம்பு - 1/4 தேக்கரண்டி
நறுக்கிய வெங்காயம் - 1 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
செய்முறை:
மீனை சுத்தம் செய்து கொள்ளவும்.
தேங்காயை அரைத்து முதல் பால், இரண்டாம் பால் எடுத்துக்கொள்ளவும்.
தக்காளியை கொதி நீரில் போட்டு தோல் நீக்கிக்கொள்ளவும்.
பச்சைமிளகாயை நீளவாக்கிலும், கறிவேப்பிலை, மல்லித்தழை, வெங்காயத்தை பொடியாகவும் நறுக்கவும்.
இத்துடன் பிசைந்து கொள்ளக்கூடிய பொருட்கள், மசாலாத்தூள்கள், உப்பு, புளிக்கரைச்சல், இரண்டாவது தேங்காய்ப்பால் அனைத்தையும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
இவற்றை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
நன்கு நுரைத்து கொதி வந்ததும், மீன் துண்டங்களை சேர்த்து கெட்டி தேங்காய்ப்பாலை சேர்க்கவும்.
குழம்பு தளதளவென கொதித்ததும் அடுப்பை சிம்மில் வைக்கவும்.
தாளிப்பு சட்டியில் எண்ணெய் விட்டு வெந்தயம், சோம்பு சேர்த்து சிவந்ததும் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து எண்ணெயில் மிளகாய்தூளை சேர்த்து கரண்டியால் கலந்து விடவும்.
சிம்மில் சுமார் 10 நிமிடங்கள் வைத்து இருந்து அடுப்பை அணைத்த பின், தாளிப்பை கொட்டி விடவும். பிறகு பரிமாறவும்.
குறிப்புகள்:
சாதம், டிபன் அனைத்துக்கும் ஏற்றது